48 மணி நேரத்தில் பதில் கேட்ட பேரறிவாளன்! 


"ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த செப்டம்பர்  9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள்  ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர். இந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளன், தமிழக அரசு தீர்மானம் இயற்றி இருக்கும் நிலையில், தம்மை விடுவிப்பதில் தாமதம் ஏன். அதற்கான காரணம் என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகைக்கு மனு அனுப்பியுள்ளார். அதுவும் அந்த மனுவில் தமக்கு 48 மணி நேரத்தில் பதில் வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் இல்லை. இது குறித்து பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் ட்விட்டர் பக்கத்தில் அவரது வேதனையைப் பதிவு செய்துள்ளார். அதில்,  ``விடுதலைக் கோப்பில் கையெழுத்தாகவில்லை என்பதால் அவநம்பிக்கையில் சிக்கிச் சாகிறேன்" என்று  கூறியுள்ளார். மேலும் என் மகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுதலை செய்வதற்கான கால தாமதம் ஏன் என்று கேட்டிருப்பதற்கு இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் இல்லை. 48 மணி நேரத்தில் கேட்கப்பட்ட மனுவுக்கு, 48 நாள் ஆகியும் பதில் இல்லை. அரசியல்  சட்டத்துக்கும் மதிப்பில்லை. ஆர்.டி.ஐ சட்டமும் செல்லாம போயிடுமா என்று வேதனை தெரிவித்துள்ளார். இது குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் பேசியபோது, ``நாளிதழில் வந்தச் செய்தியை வைத்து ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார் பேரறிவாளன். அவர் தகவல் கேட்டு 48 நாள் ஆகியும், இன்னும் அந்த மனுவுக்குப் பதில் இல்லை. இது குறித்து  தொலைபேசி மூலமாக பேசியபோது அந்த மனு என்ன ஆனது என்பது தொடர்பாககூட முழுமையான விவரத்தை தெரிவிக்க  மறுக்கிறார்கள்" என்றார் ஆதங்கமாக!.. "ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையை மாநில அரசே முடிவு
செய்துகொள்ளலாம்" என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. அதையடுத்து, கடந்த செப்டம்பர்  9-ம் தேதி கூடிய தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்கான தீர்மானத்தை நிறைவேற்றி, அதைத் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்குப் பரிந்துரை செய்து அனுப்பிவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டு நான்கு மாதங்கள்  ஆன நிலையில், அதன்மீது எந்த முடிவும் எடுக்காமல் அமைதிகாத்து வருகிறார் தமிழக ஆளுநர்.

இந்த நிலையில், சிறையில் உள்ள பேரறிவாளன், தமிழக அரசு தீர்மானம் இயற்றி இருக்கும் நிலையில், தம்மை விடுவிப்பதில் தாமதம் ஏன். அதற்கான காரணம் என்ன என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆளுநர் மாளிகைக்கு மனு அனுப்பியுள்ளார். அதுவும் அந்த மனுவில் தமக்கு 48 மணி நேரத்தில் பதில் வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால், அந்த மனுவின் மீது இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் இல்லை. இது குறித்து பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் ட்விட்டர் பக்கத்தில் அவரது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.

அதில்,  ``விடுதலைக் கோப்பில் கையெழுத்தாகவில்லை என்பதால் அவநம்பிக்கையில் சிக்கிச் சாகிறேன்" என்று  கூறியுள்ளார். மேலும் என் மகன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுதலை செய்வதற்கான கால தாமதம் ஏன் என்று கேட்டிருப்பதற்கு இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து பதில் இல்லை. 48 மணி நேரத்தில் கேட்கப்பட்ட மனுவுக்கு, 48 நாள் ஆகியும் பதில் இல்லை. அரசியல்  சட்டத்துக்கும் மதிப்பில்லை. ஆர்.டி.ஐ சட்டமும் செல்லாம போயிடுமா என்று வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் பேசியபோது, ``நாளிதழில் வந்தச் செய்தியை வைத்து ஆர்.டி.ஐ சட்டத்தின் கீழ் தகவல் கோரியிருந்தார் பேரறிவாளன். அவர் தகவல் கேட்டு 48 நாள் ஆகியும், இன்னும் அந்த மனுவுக்குப் பதில் இல்லை. இது குறித்து  தொலைபேசி மூலமாக பேசியபோது அந்த மனு என்ன ஆனது என்பது தொடர்பாககூட முழுமையான விவரத்தை தெரிவிக்க  மறுக்கிறார்கள்" என்றார் ஆதங்கமாக!..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.