சிங்களதமிழும் இனவாதிகளல்ல..!

சிங்கள மக்களும், தமிழ் மக்களும் இனவாதிகள் அல்ல என, வட. மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.


வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே விடுத்த கோரிக்கைக்கமைய கிளிநொச்சியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சப்ரகமுவ மாகாணத்திலிருந்து இன்று (சனிக்கிழமை) நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே வடக்கு ஆளுநர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் நலன் கருதி சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, அப்பகுதியில் சகோதர மொழி மக்களினால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் இங்கு வருகைத் தந்துள்ளார்.

அவரது இந்த சேவைக்காக வடக்கு மக்களின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் நாட்களில் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலிருந்தும் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் தென்னிலங்கை இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட போது வடக்கிலிருந்து தமிழ் மக்களினால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இவ்வாறானதொரு அனர்த்தம் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் சாதி, மத பேதமின்றி அனைவரும் மனிதாபத்துடன் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.