கிராமசக்தியால் தென்னிலங்கையில்25 மில்லியன் திட்டம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பிக்கப்பட்ட கிராம சக்தி மக்கள் இயக்கத்தினால் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.


அந்தவகையில், அநுராதபுரம் பளுகஸ்வெவ, ஆசிரிகம கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட 250 இலட்சம் ரூபாய் நிதியில் அபிவிருத்தி பணிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

2025 ஆம் ஆண்டாகும் போது வறுமையை ஒழித்துக் கட்டுவதற்காக ஜனாதிபதியின் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராமசக்தி மக்கள் இயக்கத்தில் ஆசிரிகம கிராமமும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

கிராமசக்தி வடமத்திய மாகாண ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பங்கு பற்றியதன் பின்னர் ஜனாதிபதி கடந்த 20 ஆம் திகதி ஆசிரிகம கிராமசக்தி கிராமத்திற்கு விஜயம் செய்தார்.

அங்கு புதிய வீடுகள், விவசாயத்திற்கான முறையான நீர் வழங்கல் மற்றும் முன்பள்ளி பாடசாலை கட்டிடங்கள் தொடர்பில் கிராமவாசிகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. இதற்காக 250 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.

அந்த வகையில் அங்கு இரண்டு முன்பள்ளி பாடசாலை கட்டிடங்களை புதிதாக நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கிராமசக்தி மக்கள் இயக்கத்தினூடாக தற்போது 1000 கிராமங்களில் நேரடியாக செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 700 கிராமங்கள் சமூக நிர்வாக கிராமங்களாகும். ஏனைய 300 கிராமங்கள் உற்பத்தி மற்றும் சேவைக் கிராமங்களாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.