ஹட்டனில் தீ அனர்த்தம்

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட போடைஸ் தோட்ட குடியிருப்பில் இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற திடீர் தீ விபத்தில் தொடர் லயன் குடியிருப்பிலிருந்த 24 வீடுகளும் தீக்கிரையாகியுள்ளது.


இதில் குடியிருப்பில் வசித்துவந்த 27 குடும்பங்களை சேர்ந்த சுமார் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திடீரென பரவிய தீயை தீயணைப்பு வீரர்களும், தோட்ட மக்களும் பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

அனர்த்தத்தில் வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணம் உள்ளிட்ட மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.