ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கூட்ட்டமைப்பு

ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்த கூட்ட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இப்போது ஜனநாயகத்தை காப்பாற்றி விட்டோம் என்று தம்பட்டம் அடிக்கிறார். இது கேலிக்கூத்தாக உள்ளது என்று தமிழர் விடுதலைக் கூடடணியின் செயலாளர் வீ.ஆனந்த சங்கரி தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில் உள்ள தமிழர் விடுதலைக் கூடடணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது,

கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனநாயகம் புதைக்கப்படும் போது இவர்கள் எங்கிருந்தார்கள். தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சை கேட்டு தேர்தலைப் புறக்கணித்தார்கள். அன்று ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருந்தால் தமிழ் மக்களுக்கு இப்போது அவலநிலை வந்திருக்காது.

கடந்த காலங்களில் சம்பந்தன் நாடாளுமன்றம் எவ்வாறு வந்தார்? காலையில் தோற்ற மாவை மாலையில் வென்றது எப்படி? கஜேந்திரகுமாருக்கு வாக்குகள் எப்படிக் கிடைத்தன என மக்கள் நன்கு அறிவார்கள்.

அரசியல் நெருக்கடி ஏற்பட்ட போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புச் சரியானது. நான்கு வருடங்கள் நிறைவடைய முன்னர் கலைத்தமை தவறு என்று கூறியே தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் தமிழர்களுக்கு ஒரு பயனும் இல்லை.இதனால் நன்மை அடைந்தவர்கள் கூட்ட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே.அவர்களின் பதவிக்காகவே ரணிலுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.-என்றார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.