பல்­க­லைக் கழ­க பகிடிவதையின் பாதகம்
யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தின் கிளி­நொச்சி வளா­கத்­தைச் சேர்ந்த பல்­க­லைக் கழக மாண­வன், கழுத்­த­றுத்து காயங்­க­ளு­டன் கிளி­நொச்­சி­ மருத்­து­வ­ம­னை­யில் நேற்று இரவு
சேர்க்­கப்­பட்­டுள்­ளான்.
பகி­டி­வதை கார­ண­மா­கவே மாண­வன் உயிர்­து­றக்க முயற்­சித்­த­தா­கக் குற்­றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த பல்­க­லைக்­க­ழக மாண­வன் மூன்று தினங்­க­ளுக்கு முன்­னர் பளை மருத்­து­வ­ம­னைக்­குச் சிகிச்­சைக்­குச் சென்­றுள்­ளான். மருத்­து­வ­ரி­டம், தூக்க வரு­வ­தில்லை என்று
பயந்­த­வாறு தெரி­வித்­துள்­ளான். மருத்­து­வர் மருந்­து­களை
வழங்­கி­யுள்­ளார். மீண்­டும் திங்­கட்­கி­ழமை மருத்­து­வ­ம­னைக்கு
வரு­மாறு கூறி­யுள்­ளார்.

இந்த நிலை­யில் நேற்­று­மாலை, உற­வி­னர்­க­ளி­டம் பல்­க­லைக்­
க­ழ­கத்­தில் இடம்­பெ­றும் பகி­டி­வதை தொடர்­பில் கதைத்­துள்­ளான். அதன் பின்­னர் அறைக்­குள் சென்று கத­வைப் பூட்­டி­விட்டு கழுத்தை அறுத்து உயிர்­து­றக்க முயற்­சித்­துள்­ளான்.

மாண­வனை உற­வி­னர்­கள் காப்­பாற்றி, பளை மருத்­து­வ­ம­னை­யில் சேர்ப்­பித்­த­னர். அங்­கி­ருந்து நோயா­ளர் காவு வண்டி ஊடாக
கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டு  கிளி­நொச்சி
மருத்­து­வ­ம­னை­யில்  சிகிச்சை பெற்று வரு­கின்­றான்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.