மட்டக்களப்பில் அரச மரியாதைகளுடன் பொலிஸ் உத்தியோகத்தரின் இறுதிச்சடங்கு

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் இறுதிச்சடங்கு அரச மரியாதையுடன் இடம்பெற்றது.


குறித்த இறுதிச்சடங்கு உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் தினேஸின் சொந்த ஊரான பெரியநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.

குறித்த இறுதிச்சடங்கில் கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நுவன் வெதசிங்ஹ, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் சாமந்த விஜயசேகர உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அத்துடன், ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபர் ஆகியோரால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கலுரைகளுடன், பூரண பொலிஸ் மரியாதையுடன் 39 மரியாதை துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மட்டக்களப்பு வவுணதீவு சோதனைச்சாவடியில் கடந்த 30ஆம் திகதி இரவு அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.