மஹிந்த – ரணில் இருவருக்கும் ஆதரவு வழங்கப் போவதில்லை

மைத்திரி மஹிந்த கூட்டணிக்கோ அல்லது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினருக்கோ தாம் ஆதரவு
வழங்கப் போவதில்லையென தமிழ்தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

வவுனியா சேமமடுவில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி படுகொலைசெய்யப்பட்ட 29 பேரின் முப்பத்து நான்காவது நினைவு தினம், சேமமடு சண்முகானந்தா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்றது. சர்வதேச சமூகத்தின் மத்தியஸ்துடன் மாத்திரமே தமிழ் மக்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் எனத்தெரிவித்த அவர், அந்த வல்லமையும், சக்தியும் எதிர்கட்சித் தலைவரிடம் மாத்திரமே இருப்பதால் அவர் அதனை சரியாக பயன்படுத்தவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், இவ்வாறுதெரிவித்தார்.

தொடர்ந்துபேசிய அவர், ஸ்ரீலங்காவின்சுதந்திர தினத்திற்கு முன்பாக ஒரு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்பது ஒருஏமாற்று வேலை எனவும் சாடியுள்ளார்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #sivasathiaanath

No comments

Powered by Blogger.