ரணிலைச் சிறையிலடைக்கும் நாள் நெருங்கிவிட்டது

நாட்டில் இடம்பெற்ற மிகப் பெரிய ஊழலான மத்திய வங்கி ஊழல் குற்றத்தில் முதல் குற்றவாளியான ரணில் விக்கிரமசிங்கவைக் கைது செய்து சிறையிலடைப்பதே எமது முதலாவது கடமை என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


நாட்டின் அரசியல் குழப்பநிலை தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினை நாம் எதிர்பார்த்துள்ளோம். தீர்ப்பு எமக்கு சாதகமாக அமைய வேண்டும் என்பதே எமது பிரார்த்தனையாகும்.

எமது ஆட்சியை உறுதியாக அமைத்தவுடன் ரணில் விக்ரமசிங்கவை கைதுசெய்து சிறையிலடைப்பதே எமது முதல் நடவடிக்கை.

அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் நாட்டினை பிளவுபடுத்தும் கொள்கைக்கு ஆதரவு வழங்காது என்பது எமக்கும் தெரியும்.

எனவே வடக்கு கிழக்கு மக்களின் அபிவிருத்தி அவசியமா அல்லது ரணிலுக்கு ஆதரவளித்து நாடு பிளவு பட வேண்டுமா என்பதை வடக்கு கிழக்கு மக்களே தீர்மானிக்க வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #vasuthava

No comments

Powered by Blogger.