ஒதியமலை படுகொலை நினைவேந்தல்

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட எல்லைக் கிராமமான ஒதியமலையில் 1984 ஆம் ஆண்டு
இலங்கை இராணுவத்தால் அதிகாலை வேளையில் கலந்துரையாடலுக்கென அழைத்துசென்று ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் வைத்து சுட்டுகொல்லப்பட்டனர். இதன்போது உயிரிழந்த 32 பொதுமக்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நினைவு கூறப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவின் 2 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் குறித்த 32பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியின் திறப்புவிழா நிகழ்வும் ஒதியமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் 32 பொதுமக்களின் நினைவாக அமைக்கப்பட்ட அன்னதான மண்டப திறப்பு விழாவும் இடம்பெற்றது
படுகொலை செய்யப்பட்ட 32 பேரினுடைய உற்றார் உறவினர்கள்வருகைதந்து அவர்களுக்கு மாலை சூடி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர் நினைவுரைகளை தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்மா சாந்தி பிரார்த்தனைகள் இடம்பெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments

Powered by Blogger.