முதல் முறையாக வைத்தியத்துறைக்கு தெரிவாகி பெருமைசோ்த்த மாணவன்
அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 15ஆம் கிராமத்தை சேர்ந்த மாணவன் முருகமூர்த்தி கிருஷாந் க.பொ.த உயர் தரத்தில் மாவட்ட ரீதியில் 13ஆம் இடத்தை பெற்று பிரதேசத்தில் வைத்தியதுறைக்கு தெரிவான முதல் மாணவன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

கல்லோயா குடியேற்ற கிராமங்களை உள்ளடக்கிய நாவிதன்வெளி பிரதேசத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 1 ஏ, 2 B சித்திகளையும் பெற்று குறித்த மாணவன் வைத்தியதுறைக்கு தெரிவாகியுள்ளார்.

இந்த மாணவன் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் உயர் கல்வியை கற்றுள்ளார். இது தொடர்பில் முருகமூர்த்தி கிருஷாந் கருத்து தெரிவிக்கையில்,

பெற்றோரும், ஆசிரியர்களும், சக தோழர்களும் கொடுத்த ஊக்குவிப்பும் பக்கபலமும் தான் நான் வெற்றி பெற காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் வைத்தியதுறைக்கு தெரிவான முதலாவது மாணவனான முருகமூர்த்தி கிருஷாந்திற்கு தவிசாளர் மலர் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதேவேளை அப்பகுதி மக்கள் அனைவரும் குறித்த மாணவனுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.