ஆயுளை அதிகரிக்கும் இயற்கையின் இனிய வரம் பழங்கள்!

மனித குலவிருத்தியின் ஆரம்பகாலத்திலே பழங்கள் மனிதனின் பிரதான உணவாக இருந்து வந்தது. பழங்கள் உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தப் பழங்களின் மகிமையை அறிந்ததாலேயே முருகக்கடவுள் கூட பழம் சம்பந்தமான ஒரு பிரச்சினை காரணமாக கோபங் கொண்டு பழனிமலை வரைபோனதாக சொல்லப்படுகிறது. இயற்கையன்னை எமக்களித்துள்ள ஏராளமான கொடைகளில் ஒரு முக்கிய இடத்தைப்பிடிப்பது விதவிதமான சுவைகளையும் நிறங்களையும் கொண்ட பழங்கள் ஆகும்.

பழங்கள் நீரிழிவு உள்ளவர் களுக்கு நல்லதல்ல என்று கருதப்பட்ட காலம் நன்றாக இருந்தது. ஆனால் பழங்களை தினமும் உண்டு வந்தால் வகை 2 நீரிழிவு எனப்படும் நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று ஆராய்ச்சிகள் உறுதி செய்கின்றன.

சுமார் இரண்டு இலட்சம் பேரின் உணவுப்பழக்கம் மற்றும் உடல் ஆரோக்கியம் சம்பந்தமான 25 வருட தரவுகளை ஆராய்ந்து பார்த்ததில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது. அதே நேரம் பழச்சாறு குடிக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு வகை 2 வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எனவே பழங்களை பழச்சாறாக்கி உண்பதிலும் பார்க்க பழங்களாக உண்பது சிறந்தது என கருதப்படுகிறது.

பழங்கள் ஒவ்வொன்றுக் பழங்கள் ஒவ்வொன்றுக் பழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள்இருக்கின்றன. ஆனால் மருத்துவச்சிறப்பியல்புகள் அனைத் வச்சிறப்பியல்புகள் அனைத்வச்சிறப்பியல்புகள் அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு மருத்துவப் பழமாக ஜம்புப் பழமே விளங்கு கின்றது.

சுவைமிக்க இந்தப்பழம் கலோரி பெறுமானம் குறைந்தது. நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது. நீரிழிவு நோயாளரில் கூட குருதி வெல்ல அளவை அதிகரிக்கமாட்டாது. அதிகளவு நீர்த்தன்மையும் நார்த்தன்மையும் மையும் கொண்டது.

சத்துக்கள் நிறைந்தவை பசியைப் போக்கும். குடிப்பதற்கான இயற்கையான ஆரோக்கிய பானம் தயாரிப்பதற்கு இது ஒரு சிறந்த பழமாகும்.

சிறுவர்களும் சுகதேகிகளும் சகலவிதமான நோயாளர்களும் உண்பதற்கு ஏற்ற ஒரு கனியாக இது விளங்குகிறது. அத்துடன் இது குருதி கொலஸ்ரோலின் அளவைக்குறைப்பதற்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது.

மாம்பழங்கள் போன்ற இனிப்புச்சுவை கூடிய பழங்களை செம்பழ நிலையில் உண்பது சிறந்தது. அத்துடன் மாம்பழத்தைத் தோலுடன் உண்பதே நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் தோலில்தான் அதிக அளவு விற்றமின் சி காணப்படுகிறது. மேலும் கல்சியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பொஸ்பரசு இதில் அதிக அளவு உள்ளது.

வாழைப்பழமானது எக்காலத்திலும் கிடைக்கக்கூடிய முக்கனி. இது எமது பிரதேசத்தில் நன்கு விளையக்கூடிய மலிவான, சுவையான பழமாகும். உண்ணக்கூடிய தாகவும் இருக்கின்றது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் இது ஏனைய பழங்களுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதற்கு சான்று பகர்கின்றது.

இரும்புச்சத்து அதிகமுள்ள மாதுளை இரத்தத்தின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன் மாதுளம்பழங்களிலே பல எண்ணற்ற மருத்துவக் குணங்கள் இருப்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டு வருகின்றது. விதைகள் கொட்டைகள் என்பனவும் உடலில் பல அனுகூலமாக விளைவுகளை ஏற்படுத்துவது அறியப்பட்டு வருகிறது. எவ்வெளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் வாழலாம் என்று நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.

அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் பேரிடம்நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன. தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால் எந்த ஒரு காரணத்தாலும் ஏற்படும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.

கச்சான், கடலை, கசுக்கொட்டை மாதுளம்விதை, பாதாம்பருப்பு, கௌப்பி, பயறு போன்றவை உடல் ஆரோக்கியத்தை பேண உறுதுணையாக இருக்கின்றன. பழங்கள் மிக வேகமாக சமிபாடடையக் கூடியவையாதலினால் இவற்றைத் தனியாக உண்பது நல்லது.பொதுவாக இரவில் ஏனைய உணவுகளைத் தவிர்த்து பழங்களை மட்டும்உட்கொள்வது சாலச்சிறந்தது.

கலப்படமற்ற இயற்கையின் இனிய வரங்களான பழங்கள், விதைகள் என்பவற்றை அதிகம் உண்டு ஆரோக்கியம் பெறுவோம். மேலைத்தேய நாடுகளில் இயற்கையான பொருட்களிற்கு மதிப்பு அதிகம். அவர்களுக்கு அவற்றைப் பெற்றுக்கொள்வது கடினமாக இருந்தும் அதிகவிலை கொடுத்து இயற்கையான உணவுகளை வாங்க எத்தனை முயற்சிகளை எடுத்துக்கொண்டி ருக்கிறார்கள். ஆனால் நாம் எம்மைச் சுற்றி மலிவான, இயற்கையான பொருட்கள் எவ்வளவு இருந்தும் அதிக விலை கொடுத்து பொதி செய்யப்பட்ட பொருட்களை வாங்க ஆசைப்படுகின்றோம்.

ஒரு பொருளைப் பேணியிலோ அல்லது போத்தலிலோ பொதி செய்ய முன்பு அது பலவிதமான வெப்பநிலை மாற்றங்களுக்கும் உலர்த்துதல்களுக்கும் உட்படுத்தப்படுகின்றன. இதன் போது அதன் இயற்கையான மூலக்கூறுகளில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்படுகின்றன.

அத்துடன் இவை பழுதுபடாமல் இருப்பதற்காக இவற்றிற்குப்பல்வேறுபட்ட இரசாயனப் பதார்த்தங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. எனவே இயற்கை அன்னையான உடன் உணவுகளை உண்பதில் ஆர்வத்தை வளர்த்து ஆரோக்கியம் பெறுவோம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.