ஹற்றன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள்
ஹற்றன் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகம் மற்றும் பிரதேச செயலகம், பிரதேச சபை, நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ காரியாலயம் என பலரும் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கப்பட்டன. உடுதுணிகள், பாய் மற்றும் உலர் உணவு பொருட்கள், பாடசாலை கற்றல் உபகரணங்கள் என்பன பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
ஹற்றன் – போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 108 பேர் பாதுகாப்பாக தோட்ட வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த 24 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 19 குடும்பங்களை சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 35 பேரும், சிறுவர்கள் 45 பேரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை