மஹிந்தவின் மகனுக்கு அறுவை சிகிச்சையா? – உண்மையை வெளிப்படுத்தினார் யோசித

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரான யோசித ராஜபக்ஷவிற்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ததாக செய்திகள் வெளியாகின.
எனினும், குறித்த தகவல் போலியானது என யோசித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
றக்பி போட்டி ஒன்றின் போது பலத்த காயம் ஏற்படவே அவர் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருவதாக ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் அவருக்கு மண்டை ஓட்டில் பலத்த காயம் ஏற்பட்டுள்ள நிலையில் முகம் மற்றும் கன்னத்தின் இருபுறமும் உலோக தகடுகள் பொருத்தி அறுவை சிகிச்சை இடம்பெறுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள யோசித ராஜபக்ஷ, “இது தவறான செய்தி எனக்கும் எனது குடும்பத்திற்கு ஒரு புதிய விஷயம் அல்ல.
இந்த தகவல் உண்மை இல்லை, ஆம் நான் ஒரு அறுவை சிகிச்சை செய்தேன் ஆனால் பாரிய காயமும் இல்லை, தலையில் அறுவை சிகிச்சையும் இல்லை. நான் விரைவில் களத்திற்கு திரும்புவேன்.” என கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.