தாயக மக்களின் மீது வைத்திருக்கும் பேரன்பை மீண்டும் நிரூபித்த பேர்லின் வாழ் தமிழ் மக்கள்

தாயகத்தில் கடந்த வாரம் தொடர்மழையால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால்   பல்லாயிரக்கணக்கான எமது தாயக உறவுகள் தமது
உடமைகளை இழந்து இடைத்தங்கல் முகாங்களில் சில  நாட்களாக தமது வாழ்க்கையை தொடர்ந்தனர்.

இந்த நிலையில் அந்த மக்களின் அவசர நிலையை கருத்தில் கொண்டு முதல் இரண்டு நாளிலுமே  பேர்லின் அம்மா உணவகம் ஐந்து  லெட்சம்  ரூபாய் செலவில்  உணவுகள் , நுளம்புவலைகள் மேலும் அடிப்படை தேவைகளை தாயகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளின் ஊடாக செய்துள்ளது.

அத்தோடு மட்டுமல்லாமல் பேர்லின் வாழ் தமிழ் மக்கள் தாமாகவே முன்வந்து தங்களது நண்பர்களுடன் இணைந்து தாயக உறவுகளுக்கு உதவிட முன்வந்ததும், பேர்லின் வாழ் இளையோர்கள் Help for Smile e.V.  தொண்டர் அமைப்பின் வங்கி ஊடாக தமது உதவியை வழங்கியதும்,  கத்தோலிக்க தமிழ் பங்கு பேர்லின் கிளையால் அவர்களது நத்தார் விழாவில் உதவிக்கரத்தை நீட்டியதும் , பேர்லின் தமிழாலயத்தால் உதவியதும் தாயக மக்களின் மீது வைத்திருக்கும் பேரன்பையும் உணர்வையும்  மீண்டும் நிரூபித்துள்ளார்கள்.

அனைவரும் இணைந்து நல்லதை செய்வோம்.
பேர்லின் அம்மா உணவகம்

No comments

Powered by Blogger.