மண்ணோடும் மக்களோடும் ஒன்றாக பயணிக்கும் பேர்லின் அம்மா உணவகம்

மட்டக்களப்பில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளுக்கு பேர்லின் அம்மா உணவகத்தால் உலர்உணவுப்பொருட்கள்
வழங்கப்பட்டது. நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் 120 க்கும் மேலான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  உறவுகளின் வேண்டுகோளுக்கு அமைய   உலர்உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு அவர்கள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும்  உறுதுணையாக இருப்போம் என உறுதியளிக்கப்பட்டது. நிகழ்வில் திட்டமிட்டதை தாண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தேவை இருந்ததால் மேலும் பேர்லின் அம்மா உணவகம் ஏனையவர்களுக்கான நிவாரணத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தோடு மட்டக்களப்பில் தமிழ்த் தேசியம் சார்ந்து நடைபெறும் சமூக பணிகளுக்கும் அம்மா உணவகம் என்றும் உறுதுணையாக உள்ளது.

No comments

Powered by Blogger.