உயர்சாதனை மனிதர் விருது

டாண் (DAN) தொலைக்காட்சி இவ்வாண்டு தொடக்கம் உயர்சாதனை மனிதன் விருதை வழங்கவிருக்கின்றது. அந்த வகையில் இவ்வாண்டிற்கான (முதலாவது )விருது கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

.
நாவற்குழியில் திருவாசக அரண்மனையை நிறுவிய சாதனைக்காக இவ்விருது வழங்கப்படுவதாக டாண் தொலைக்காட்சியின் விருது தெரிவுக்குழு அறிவித்துள்ளது. 
.
இது பற்றிய அறிவிப்பு இன்று 29.12.2018 இரவு வலம்புரி நட்சத்திர விடுதியில் இடம்பெற்ற ஒன்றுகூடலில் விடுக்கப்பட்டது. 
.
எதிர்வரும் 31.12.2018 யாழ் முற்றவெளியில் முன்னெடுக்கப்படவுள்ள பிரமாண்டமான புதுவருட வரவேற்பு விழாவில் விருது வழங்கப்படவுள்ளது.
.
விருது பெறும் நம்மண்ணின் நவீன நாவலருக்கு நல்வாழ்த்துக்கள். 
 

No comments

Powered by Blogger.