ஜேர்மனியில் ஸ்ரீ வர சித்திவிநாயகர் ஆலயம்150 மாணவர்களுக்கு கற்றல் உதவி!

இன்றைய நாளில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கம் மற்றும் பெண்கள் சிறுவர்கள்
மேம்படுத்தும் குடும்பங்களின் சங்கம் என்பன இனைந்து மன்னார் மாவட்டத்தில் கடந்த காலத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களான சப்பாத்து மற்றும் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது இன் நிகழ்வின் போது அகில இலங்கை தமிழ்க்காங்கிரசின் சார்பாக  நூற்றி ஐம்பது மாணவர்களுக்கான  அப்பியாச கொப்பிகள் வழங்கி வைக்கப்பட்டன  அதே வேளை   ஜேர்மனியில் இருந்து ஸ்ரீ வர சித்திவிநாயகர் ஆலயத்தினுாடகவும் அப்பியாச கொப்பிகள் வழங்கப்பட்டன

 அதே வேளை  நீர்கொழும்பு சென் செபஸ்ரியன் இளைஞர்கழகம் குழந்தை யேசு மன்றம்  என்பனவற்றின் நிதி அனுசரனையிலும் கிங் எக்கோ கலிட்ச்சர் நிறுவணத்தாரின் நிதி அனுசரனையில் நூற்றி ஐம்பத்து இரண்டு மாணவர்களுக்கான சப்பாத்துக்கள் வழங்கி வைக்கப்பட்டது இந்நிகழ்வின் போது திரு.மாட்டின் டயஸ் சட்டதரணி டினேஸ்வரன் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தலைவி  மற்றும் நூற்றுக்கணக்கான பாதிக்கப்பட்ட் குடும்ப உறவுகள் கலந்து கொண்டனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.