அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் சதி முயற்சி!- வாசுதேவ சாடல்

அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள சதி முயற்சியில் ஈடுபடுவதாக, ஜனநாயக இடதுசாரி
முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன், அழுத்தங்களில் இருந்து தப்பிக்கொள்ள தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அரசாங்கம் தேர்தலை நடத்தி மக்களின் ஆணையைப் பெறாமல், எப்படியாவது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளவே முயற்சிக்கின்றது.
இதற்காக, அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளது. அண்மையில் மாவனெல்லையில் இடம்பெற்ற சம்பவமும் அரசாங்கத்தின் சதித்திட்டமாக இருக்கலாம்.
அதுமாத்திரமன்றி அடுத்த வருடம் ஜனவரியிலிருந்து ஊடகங்களைக் கட்டுப்படுத்த, பிரதமர் ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசாங்கம் மேற்கொள்ளும் சதித்திட்டங்களை மறைக்கும் முயற்சியின் ஆரம்பமாக ஊடகங்களைக் கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளார்” எனக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.