உயிரச்சுறுத்தல்! – பாதுகாப்பு வழங்குமாறு சண். குகவரதன் கோரிக்கை

தமக்கு உயிரச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவித்துள்ள மேல் மாகாண சபை உறுப்பினர் சண். குகவரதன், பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) பொலிஸ் தலைமையகத்திற்குச் சென்று எழுத்துமூலம் இக்கோரிக்கையை முன்வைத்ததாகவும், உயிரச்சுறுத்தல் காணப்படுவதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்தோடு, தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலில் காணப்படும் பிரச்சினையை தீர்க்க இருதரப்பு சட்டத்தரணிகளும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே தான் கைதுசெய்யப்பட்டதாக சண். குகவரதன் குறிப்பிட்டார்.
இச்செயற்பாடு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இடம்பெற்றுள்ளதென்றும், எதிர்வரும் தேர்தலில் இதற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தமக்கு காணப்படும் உயிரச்சுறுத்தல் தொடர்பான விடயங்களை விரைவில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் சண். குகவரதன் கூறினார்.
Powered by Blogger.