கஞ்சாவுடன் ​கைது செய்யப்பட்ட இளைஞன் சிறையில் தற்கொலை

கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவன் கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலையத்தில் வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த இளைஞன் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்படும் போது குறித்த இளைஞனிடம் 1 கிராம் கஞ்சா இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கைது செய்யப்பட்டு கட்டுகஸ்தொட்ட பொலிஸ் நிலைய சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலேயே 26 வயதான குறித்த இளைஞன் தற்கொலை செய்துகொண்டார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது கண்டி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.