செல்வசன்னதி அச்சுவேலி வீதியில் வீதியை அடையாளபடுத்தும் நடவடிக்கை!

வலி கிழக்கு பிரதேசசபைக்கு உட்பட்ட செல்வசன்னதி அச்சுவேலி வீதியில் நீர்ப்பாசனம் தினைக்களம் நன்நீர் கடலில் கலக்காமல் இருப்பதற்கு எடுத்த முயற்சியினால் தண்ணீர் வீதி தெரியாத அளவுக்கு வெள்ளம் இதனால்
விபத்துக்கள் நிகழவும் வாய்ப்புகள் உள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு மக்கள் அறிவித்ததால் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சண்முகராசா சிறிகுமாரன் அவர்களின் செந்த முயற்சியால் வீதியை அடையாளபடுத்தும் நடவடிக்கை (பாதுகாப்பு வேலி) எடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மின்சாரசபைக்கு உடனேயே அந்த இடத்தில் இரண்டு மின்குமிழ் பொருத்தப்பட்டவேண்டும் என்ற கோரிக்கையும் சண்முகராசா சிறிகுமாரன் அவர்களினால் வைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் சண்முகராசா சிறிகுமாரன் மற்றும் ஞானகுணேஸ்வரி கமலச்செல்வம் ஆகியோர் ஈடுபட்டனர்.

No comments

Powered by Blogger.