நிலாவெளி பகுதியில் இரண்டு மாடுகளை திருடியவர் கைது!

திருகோணமலை – நிலாவெளி பகுதியில் இரண்டு மாடுகளை திருடிய குற்றச்சாட்டின்பேரில் காரணமாக சந்தேகநபர் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சந்தேக நபர் இரண்டு மாடுகளை திருடியுள்ளதுடன் ஒரு மாட்டினை இறைச்சிக்காக அறுத்துள்ளதோடு, மற்றொரு மாட்டினை காட்டில் கட்டி வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் மாட்டின் உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோணேசபுரி, சாம்பல்தீவு பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna  #Trinkomalie #Arest

No comments

Powered by Blogger.