தமிழீழ போராட்டத்தை சொச்சை படுத்தும் -இயக்குனர்ஜிவெங்கடேஷ்குமார்

ஒரு வரலாற்றை படமாக்க முனையும் போழுது கவனிக்க வேண்டிய விடையங்கள் பாசை (குரல் நயம்), உடை பாவனை, மற்றும் உடல் பாவனை (உடல் நயம்). இந்த மூன்றும் மிக முக்கியமான ஒன்று இதில் ஒன்று இல்லாமல் போனாலும் வரலாற்று நிகழ்வு கற்பனையாகிவிடும் அதாவது திரிவு படுத்தி பொய்யாக்கி சேறடித்துவிடும். இதை நான் சொல்லவில்லை உலக புகழ் வாய்ந்த பட இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் சொல்லி இருக்கிறார்.

விடையம் என்னவென்றால் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் போராட்ட வரலாற்றை கேள்வி ஞானத்தை மட்டும் வைத்துக் கொண்டு படமாக்க முற்பட்டுள்ளார் ஜி.வெங்கடேஷ் குமார். படம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதற்கு அப்பால் இது முற்றிலும் கற்பனை கதை என்பதையும் தலைவரை சொச்சை படுத்தும் முகமாக எடுக்கப்படுகின்றது என்பதை முதல் பார்வை ஒளிப்படம் (first look) சுட்டிக்காட்டி நிக்கின்றது.
1. தலைவர் பிரபாகரன் அவர்கள் (1987 ஆண்டு கால பகுதியை தவிர) முகத்தில் தாடி அரும்பை கூட முகத்தில் வளர விட்டது கிடையாது. தலைவர் காலை எழுந்தவுடன் முதல் செய்யும் வேலை தாடி ஒதுக்குவது தான் இதனையே போராளிகளுக்கும் சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகின்றார்.
2. இராணுவ சீருடை (1987 முற்பட்ட காலப் பகுதி) அல்லது வரிச் சீருடை அணியும் போது முளங்கைகளுக்கு மேலே மடித்து விட்டிருப்பார்.
3.வரிச் சீருடை அணியும் நேரத்தில் தான் சப்பாத்து (Military Shoes) அணிவார். சிவில் உடை அணியும் போது சாதாரண பாட்டா என்று கூறப்படும் காலனியையே அணிவார். ஆடம்பர காலனி எப்போதும் தலைவர் அனிந்தது கிடையாது.
4.தலைவர் வளர்த்தது புலி அல்ல சிறுத்தை குட்டியையே வளர்த்தார். (இதனை சுட்டு கொன்றது இந்த இரானுவம்)
ஆக முதல் ஒளிப்படதிலையே பல தவறுகள் இருக்கும் போது இது வரலாற்று படமாக இருக்க வாய்ப்பே இல்லை. மாறாக முற்றிலும் கற்பனை செய்யப்பட்ட எமது போராட்டத்தை கொச்சைப்படுத்த புலி பார்வை படத்திற்கு அடுத்ததாக வரும் படம் என்பதில் சந்தேகமில்லை. எனவே தமிழக இளம் தலைமுறை உறவுகள் இதனை நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.