இலங்கையில் சுமார் 54 பேர் சுட்டுக் கொலை!

2018ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 100
பேர் காயமடைந்துள்ளதாக கொலைகளுடன் தொடர்புடைய பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் அதிகளவான சம்பவங்கள் கொழும்பு நகரில் இடம் பெற்றுள்ளதுடன் இந்த கொலைகளை பாதாள உலக குழுக்களின் உறுப்பினர்கள் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளனர் என அரச இயந்திரங்கள் பொய்கூறி வருகின்றன

ஒரே இடத்தில் அதிகமானோர் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த 25 ஆம் திகதி தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் நடந்த சம்பவமாகும்.

இதனை தவிர 10 சந்தர்ப்பங்களில் இரண்டு பேர் வீதம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளதோடு இந்த கொலைகளை தாம் செய்யவில்லை என அந்ததலைமையகம் கூறி வருவது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.