பிரான்ஸ் வீதிகளில் பற்றி எரியும் கார்கள்!

ஆசிய நாடுகளிலேயே அதிகளவான போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் இடம்பெறுவதை கேள்விப்
பட்டிருப்பீர்கள். ஆனால், ஒரு ஐரோப்பிய நாட்டில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடரும் போராட்டம் அந்த நாட்டின் அரச நிர்வாகத்தை பெரிதும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

அங்கு பல அரச உடைமைகள் சேதமாக்கப்பட்டது மாத்திரமன்றி, தனிப்பட்ட பொதுமக்களின் பெறுமதியான பொருட்களும் தீக்கிரையாக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டு வருகின்றன.  அந்தவகையில், கடந்த மாதமும் பல பெறுமதியான வாகனங்கள் எரித்து நாசமாக்கப்பட்டன.

அத்துடன் கடந்த வாரயிறுதியில் இனந்தெரியாத நபர்கள் பல கார்களை நள்ளிரவில் கொளுத்திவிட்டுள்ளனர்.  பெரும்பாலும் எரிபொருள் விலையேற்றத்திற்காக போராடும் யெல்லோ வெஸ்ட் ஆர்ப்பாட்டக்காரர்களே இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கலாம் என்று குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பிரான்சில் உள்ள லீ ​பெரிசியன் பத்திரிகை நிறுவன கட்டிடத்திற்கு அருகில் இருந்த பல வாகனங்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு தீக்கிரையாக்கப்பட்டன. இந்த போராட்டக்காரர்களால் பல பாதை நுழைவாயில்கள் மூடப்பட்டுள்ளதுடன், வர்த்தக கட்டிட தொகுதிகளையும் ஸ்தம்பிதமடைய செய்துள்ளனர்.

கடந்த மாதங்களில் முன்னெடுப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் இந்த மாதத்தில் வன்முறையாக மாற்றமடைந்துள்ளது.  நேற்றைய தினம் மாலை கூட 800 ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் போது 57 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று கடந்த வாரத்திலும் குறைந்தது 109 பேர் வரை இவ்வாறான போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.