நீதிபதி கருத்து: பிரதமர் பதில் என்ன?

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் சில நாட்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், ‘ உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சில வெளிப்புற சக்திகளின் பிடியில் இருந்தார்” என்று கூறியிருந்தார். இதற்கு பிரதமரின் பதில் என்ன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி கேட்டிருக்கிறார்.

“முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் வார்த்தைகள் பிரதமர் மோடி உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே தனது கைப்பாவையாக வைத்திருந்தார் என்பதை நிரூபிக்கிறது. நீதிபதியின் இந்த கருத்து குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும்” என்று ராகுல் இன்று டிசம்பர் 4 ஆம் தேதி கூறியதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நால்வர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வெளியில் இருந்து தலையீடுகள் இருப்பதை உறுதிப்படுத்தினர். அதில் ஒருவர்தான் குரியன் ஜோசப். இவரது கருத்து பற்றி பாஜக இன்னும் அதிகாரபூர்வ கருத்தைத் தெரிவிக்க வில்லை. முன்னாள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவும் கருத்து தெரிவிக்கவில்லை.
அதேநேரம், “முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியின் இந்த கருத்தின் மூலம் நீதித்துறையை அரசு தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தெரியவருகிறது. எனவே இதுகுறித்து நீதி விசாரணை நடத்தப்படவேண்டும்” என்று காங்கிரஸ் கட்சி நேற்று கோரிக்கை வைத்திருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.