2.0 படத்தின் பட்ஜெட் 600 கோடியா 400 கோடியா?

இந்திய சினிமாவில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிக பட்ஜெட்டில் தயாராகி நவம்பர் 29 அன்று வெளியான படம் 2.0 நான்கு நாட்களில் உலகம் முழுவதும் மொத்த வசூல் 400 கோடி ரூபாய் என்று அதிகாரபூர்வமாக இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. நடக்காத ஒன்றை நடந்துவிட்டதாக நம்ப வைப்பது கார்ப்பரேட்

நிறுவனங்களின் உலகளாவிய யுக்தி. அதனை லைகா நிறுவனம் சாதித்திருக்கிறது. ஒட்டு மொத்த ஊடகங்களும் 400 கோடி ரூபாய் நான்கு நாட்களில் சாத்தியமா என்பதை ஊடுருவி பார்க்கவில்லை.

2.0 படத்தின் பட்ஜெட் 600 கோடி ரூபாய் என கூறினார். படத்தின் இயக்குனர் 450 கோடி ரூபாய் என பட வெளியீட்டுக்கு முன் அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதில் எது உண்மை?

படம் வெளியான முதல் நாள் தமிழகத்தில் இப்படத்தைத் திரையிட்ட திரையரங்குகளில் 20% தியேட்டர்களில் மட்டுமே 100% டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 3D தொழில்நுட்பம் உள்ள தியேட்டர்களில் அரங்கு நிறைந்தது. 2D சினிமா தியேட்டர்கள் ஆளில்லாமல் காற்று வாங்கியது. வட இந்திய திரையரங்குகள் அக்‌ஷய் குமார் புண்ணியத்தில் கல்லா கட்டியது. வட இந்தியா, ஆந்திரா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் வசூலை ஆதாரப்பூர்வமாக அறிவித்து விடுவார்கள். தமிழகம் இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. உண்மையான வசூலை தயாரிப்பாளர் தொடங்கி தியேட்டர் உரிமையாளர்கள் வரை கூற மாட்டார்கள். வெளிப்படைத் தன்மையும் இருக்காது. அதனால் தான் லைகா போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மாய தோற்றத்தையும், போலியான வசூல் கணக்கையும் பொதுவெளியில் அறிவித்து நம்ப வைக்கும் முயற்சியை ஏற்படுத்த முடிகிறது.

லைகா அறிவித்துள்ள ‘நான்கு நாட்களில் 400 கோடி ரூபாய்’ என்ற கணக்கு சாத்தியமா? உலகளவில் முதல்வார முடிவில் 2.0 படத்தின் மொத்த வசூல் என்ன? இதில் தயாரிப்பாளருக்குக் கிடைக்கும் சதவீதம் எவ்வளவு? பன்னாட்டு நிறுவனமான லைகா 2.0 படம் மூலம் அடைந்த பலன்களும், இழப்புகளும் என்ன? என்பது குறித்து நாளை விரிவாக மின்னம்பலத்தில் வெளியிடப்படும்.
Powered by Blogger.