இஞ்சி என்னும் அருமருந்து

y
இஞ்சி பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்களை இங்கு காண்போம்...
1. இஞ்சி என்பது வேர் கிடையாது. வேர்த்தண்டு (rhizome) அதாவது நிலத்துக்கு அடியில் வளரும் தண்டுப் பகுதி.
2. இஞ்சி மூலிகைச் செடிகளின் வகையைச் சேர்ந்தது. இது மருத்துவக் குணம் மிகுந்தது. குறிப்பாக ஜீரணத்துக்கு இது நல்லது.
3. மஞ்சள், ஏலக்காய், இஞ்சி ஆகியவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வெவ்வேறு செடி வகைகள்.
4. இஞ்சிச் செடி தென்கிழக்கு ஆசியாவில் தோன்றியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
5. கடைகளில் விற்பனை செய்யப்படுவது நன்றாக விளைந்த இஞ்சி. ஒரு செடியிலுள்ள இஞ்சி நன்றாக விளைவதற்கு 10-12 மாதங்கள் ஆகும்.
6. ஒரு இஞ்சிச் செடி நான்கு அடிகள் உயரம் வரை வளரக்கூடியது.
7. 13, 14ஆம் நூற்றாண்டுகளில், ஒரு பவுண்ட் எடையுள்ள இஞ்சிக்கு ஓர் ஆட்டின் விலையாம்.
8. இஞ்சி அநேகமாக வெப்பமான அனைத்து இடங்களிலும் விளைவிக்கப்படுகிறது. ஜமாய்க்கன் இஞ்சிதான் மிகவும் சிறப்பானது என்று கருதப்படுகிறது.
9. பல நூற்றாண்டுகளுக்கு மிளகுக்கு அடுத்து விலைமதிப்பான ஒரு பொருளாக இஞ்சி இருந்தது.
10. இஞ்சியின் அறிவியல் பெயர் Zingiber Officinale.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.