அரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடே ஜனாதிபதியின் அறிவிப்பு

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்த சட்டத்தில் திருத்தங்களை
மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரி குறிப்பிட்டுள்ளமை அவரது அரசியல் சூழ்ச்சியின் வெளிப்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்தோடு நாடாளுமன்றத்தில் 113 பெரும்பான்மையைக் கூட நிரூபிக்க முடியாதவர்கள் 150 பெரும்பான்மை ஆதரவுடன் அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதாக குறிப்பிடுவது வேடிக்கையானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் தொடரும் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் 18 ஆம் திருத்தத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்தி அதனூடாக பலனடந்துகொள்ள ஜனாதிபதியை ஒரு தரப்பினர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.