உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமான முறையிலேயே கிடைக்கும் என நம்புவதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
அந்தவகையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி இடம்பெற்ற சதித்திட்டம் தோற்கடிக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்றதிற்கு வெளியே ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு கடந்த மதத்திற்கு முன்னர் நாட்டுக்கு ஏற்பட்ட அவப்பெயரை இதன் மூலம் மீண்டும் நிறுவ முடியும் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆறு வாரங்களில் ஜனாதிபதி மற்றும் மற்றொரு குழுவால் தொடங்கப்பட்ட சதித்திட்டம் தீர்க்கப்படவேண்டும்.
ஏற்கனவே அவர்கள் நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்கள். எனவே நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகச் சிறந்த தீர்வை நீதித்துறையும் வழங்கும் என தாம் நம்புவதாக கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.