யாழ் மாவட்டசாரணர் மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை

யாழ் மாவட்டசாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணிய மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று [ 08..12.2018 ] யாழ் ப்பாணம் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலையில் கோ .சத்தியன் தலைமையில் ஆரம்பமானது.
இன்று காலை 7.30 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெற்ற இப் பயிற்சியின் ஆரம்பமாக யாழ் மாவட் ட சாரணியர் சங்கக் கொடி மற்றும் உலக சாரணர் சங்கக் கொடி என்பன ஏற்றப்பட்டு சதானந்தக் குருக்கள் மற்றும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை அதிபர் கு. திலீபன் ஆகியோரின் ஆசி உரைகளும் இடம்பெற்றன . அதனைத் தொடர்ந்து ஊடகங்களின் ஆரம்ப கால வளர்ச்சி உருவாக்கம் குறித்து வலம்புரி பத்திரிகை ஆசிரியர் விஜயசுந்தரத்தின் அனுபவப்பகிர்வினைத் தொடர்ந்தது வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான யாழ். தர்மினி பத்மநாதனின் ஊடகங்களும் கலை இலக்கிய செயற்றபாடுகளும் குறித்து அரங்கச் செயற்பாடுகளுடனான பயிற்சிகள் இடம்பெற்றன. மேலும் ஒளிப் படத் தொகுப்பு குறித்து ஸ்ரீ .துஷிகரனின் , பயி ற்சிக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. . படங்களும் தகவலும் யாழ்.தர்மினி பத்மநாதன்

No comments

Powered by Blogger.