ஈழபோராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களில் ஏணை திரைப்படம்

பாடல்கள் இரண்டு பாடல்களும் இசை- ஈஸ்வர் & தினு வரிகள்- அஜந்தன் பாடியவர் - சிவமுரளி ஒலிப்பதிவு- பாபு ஸ்ரூடியோ பிரதான நடிகர்கள் கெளதம்,கோனேஸ்,கிருஷாந்தி,அட்ஷயா,கோவிசண்,சாம்சன் ஏணை பற்றிய சிறு குறிப்பு ஏணை திரைப்படமானது ஈழபோராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களுக்குள் உள்நுழையும் அகதிகளின் ஆரம்பகட்ட சவால்களையும் அவர்களின் உணர்வியல் சிதைவுகளையும் ஏற்கனவே வந்து குடியமர்ந்து அடையாளங்களை தொலைத்து நிற்கும் பழைய ஆக்கள் என்ற பாம்புகளின் படமெடுப்புகளையும் படமாக்கியதுதான் ஏணை பிரான்சில் திரையிடப்பட்டுகிறது. பாரிசில் இலக்கம் 50 Place de Torcy - 75018 என்னுமிடத்திலேயே இந்த திரைப்படம் திரையிடப்படுகிறது.
ஏணை திரைப்படமானது ஈழப்போராட்டத்தின் நிமித்த சிதறல்களாய் புலம்பெயர் தேசங்களுக்குள் உள்நுழையும் அகதிகளின் ஆரம்பகட்ட சவால்களையும் அவர்களின் உணர்வியல் சிதைவுகளையும் ஏற்கனவே வந்து குடியமர்ந்து அடையாளங்களை தொலைத்து நிற்கும் “பழைய ஆக்கள்” என்னும் மனிதர்களின் கதையுமாக விரியும் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி 09.12.2018 மதியம் 12 மணிக்கு முதல் காட்சியும் அதனைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக 14:00, 16:00, 18:00 மணிக்கும் என 4 காட்சிகள் காண்பிக்கப்படவிருக்கிறது.
புலம்பெயர் ஈழத்தமிழரின் கலைப்பாரம்பரியங்களை கைவிடாது பேணும் பிரான்ஸ் கலைஞர்களின் உச்சமான பங்களிப்பில் பல விருதுகள் பெற்ற குறும்படங்களை இயக்கிய அஜந்தனின் இயக்கத்தில் எமது அடையாளங்களுடன் உருவாகியுள்ள முழுநீளத்திரைப்படமாக ஏணை பரிணமித்துள்ளது என படக்குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை