சுற்றுலா சென்ற நிலையில் மாயமான யுவதி – கண்ணீருடன் காத்திருக்கும் குடும்பத்தினர்

பிரித்தானியாவைச் சேர்ந்த யுவதி ஒருவர் நியுசிலாந்திற்கு சுற்றுலா சென்றிருந்த
நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிரித்தானியாவின் எசெக்ஸ் பகுதியை சேர்ந்த கிரேஸ் மில்லேன்னே என்ற 22 வயது மாணவி, கால்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட 6 வார சுற்றுலா பயணமாக நியூசிலாந்திற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் க்ரேஸின் பிறந்தநாளான 2ம் திகதி வாழ்த்துக்கள் தெரிவிப்பதற்காக, அவருடைய தாயார் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அவர் தொலைபேசியை எடுக்காததால் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், 1ம் திகதி கிரேஸ் விடுதிக்கு திரும்பவில்லை என்பது தெரியவந்தது.
ஆக்லாந்து பகுதியில் உள்ள சிசிடிவியில் கிரேஸ் நடந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து 1ம் திகதி முதல் கிரேஸ் மாயமாகியிருக்கிறார் என்பதை பொலிஸார் உறுதி செய்தனர்.
இந்தநிலையில் தமது மகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்த காணாமல் போயுள்ள யுவதியின் தந்தையான டேவிட்,
“என்னுடைய மகளுக்கு என்ன நடந்தது பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். இதுவரை எங்களை பிரிந்து இத்தனை நாட்களாக அவள் இருந்ததில்லை.
முதன்முறையாக இப்படி நடந்திருப்பது பெரும் வேதனையை அளிக்கிறது. என்னுடைய குடும்பத்தார் அனைவரும் மிகுந்த சோகத்தில் உள்ளனர். யாரேனும் பார்த்தால் தகவல் கொடுங்கள்“ என கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Powered by Blogger.