ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தலிபான்கள் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான
பொதுமக்களை கொன்றுள்ளனர். அவர்களுக்கு பதிலடி வழங்கும் நோக்கில் ராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்த நிலையில், ஹேரட் மாகாணத்தில் ராணுவ முகாம் மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் உயிரிழந்தனர்.
இங்குள்ள ஷின்டான்ட் மாவட்டத்துக்கு உட்பட்ட சேஷ்மா பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமை நேற்றிரவு நூற்றுக்கணக்கான தலிபான்கள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர்.
அவர்களுடன் துப்பாக்கி சமரில் ஈடுபட்ட 14 ராணுவ படைவீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 20 வீரர்களை சிறைபிடித்து சென்ற பயங்கரவாதிகள் அந்த முகாமில் இருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.