யானையின் அக்கிராமத்தில் வீடு சேதம்

அம்பாறை நகர எல்லையில் அமைந்துள்ள நவகம்புர கிராமத்தில் புகுந்த காட்டு யானை ஒன்று அக்கிராமத்தில் அமைந்திருந்த வீடொன்றை முற்றிலும் சேதமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


அந்த வீட்டின் உரிமையாளர் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருக்கும்போது வீட்டின் முன்னால் இருந்த ஜன்னலினூடாக வீட்டுக்குள் நுழைந்த யானை படுக்கை அறையின் கதவில் தாக்கியுள்ளது.

அந்த தாக்குதலுடன் கதவு திறக்கப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் வீட்டு உரிமையாளர் ஜன்னலின் ஊடாக பாய்ந்து வெளியில் தப்பி ஓடி உயிரை காப்பாற்றி உள்ளார்.

வீட்டிற்குள்ளிருந்த யானை சுவர்களை இடித்து சேதமாக்கியுள்ளது.

அதன்பிறகு, யானை குறித்த வீட்டிற்கு அருகில் இருந்த மற்றொரு வீட்டிற்குச் சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்றுசக்கர வண்டியை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

No comments

Powered by Blogger.