ரணில், மஹிந்த மீது நம்பிக்கையில்லை

எமக்கு ரணில் விக்ரமசிங்க மீதும் நம்பிக்கையில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் மீதும் நம்பிக்கையில்லை என மக்கள் விதலை முன்னணி
தெரிவித்துள்ளது.அத்துடன் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே போராடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா.மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்ககும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கும் பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு ஆதரவளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஜனநாயகத்துக்காக போராடுவதாலேயே நாம் மஹிந்த ராஜபக்ஷ மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து, அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.