ஆஸ்திரேலியா டெஸ்ட்: இந்திய அணி 166 ரன்கள் முன்னிலை !

இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது. புஜாரா பொறுப்பான சதம் அடிக்க, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 87.5 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஹேசல்வுட் வீசிய, ஆட்டத்தின் முதல் பந்தில் ஷமி (6) ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 250 ரன்களுடன் முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. ஹெட் 61, ஸ்டார்க் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3-ம் நாள் ஆட்டத்தை தொடங்கியபோது ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்தபோது பூம்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது.
பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ராகுல் ஜோடி களமிறங்கினர். முதலில் விறுவிறுப்பின்றி தொடங்கிய இவர்கள் பின்னர் சுதாரித்துக்கொண்டு அடித்து ஆடத் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தபோது முரளி விஜய் 18 ரன்னுக்கு அவுட்டானார்.
இந்த ஜோடி அந்நிய மண்ணில் அடித்த அதிகப்பட்ச ரன்கள் இதுவாகும். பின்னர் புஜாரா களமிங்கினார். 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ராகுல் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து கேப்டன் கோலி களமிறங்கியுள்ளார்.That's Stumps on Day 3 of the 1st Test.#TeamIndia 151/3 (Pujara 40*, Ajinkya 1*), lead by 166 runs.— BCCI (@BCCI) 8. Dezember 2018
Scorecard - https://t.co/bkvbHd9pQy #AUSvIND pic.twitter.com/S7g9VlgrT4
பின்னர் விராட் கோலி 34 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார். அடுத்த விக்கெட்டுக்காக ரகானே களமிறங்கினார். புஜாராவும் ரகானேவும் தொடர்ந்து விளையாடினர்.

இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 151-3 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 40 ரன்களுடனும், ரகானே 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். தற்போது இந்திய அணி 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

கருத்துகள் இல்லை