என்ஜிகே: யாருக்கு இசை உரிமை?

சூர்யா நடிக்கும் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவடையாத நிலையில் படத்தின் வியாபாரம் தொடங்கியுள்ளது.


முன்னணி நாயகர்கள், இயக்குநர்கள் உருவாக்கும் படங்களின் தொலைக்காட்சி உரிமை, டிஜிட்டல் தளங்களுக்கான உரிமை ஆகியவற்றைப்போல ஆடியோ உரிமையைக் கைப்பற்றவும் கடுமையான போட்டி நிலவும். செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா இணைந்து பணியாற்றியுள்ளதால் என்ஜிகே படத்தின் பாடல்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் இதன் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

யுவன் - செல்வராகவன் கூட்டணியில் உருவான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களின் பாடல்கள் மிகப் பெரிய ஹிட் அடித்தன. அதற்குப் பாடலாசிரியர் நா.முத்துக்குமாரும் முக்கிய காரணமாக இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக செல்வராகவனும் யுவனும் பிரிந்த பின்னர் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் மீண்டும் இணைந்தனர். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. அதற்குப் பின் என்ஜிகே படத்தில் இணைந்து பணியாற்றுகின்றனர். இதனால் இப்படத்தின் இசை உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது.

யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைக்கும் படங்களின் இசை உரிமையைத் தனது ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் மூலம் கைப்பற்றி வருகிறார். விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் இசை உரிமையைச் சமீபத்தில் கைப்பற்றியிருந்தார். குரங்கு பொம்மை உள்ளிட்ட பிற இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் இசை உரிமையையும் பெற்றுள்ளார். இதனால் என்ஜிகே படத்தின் உரிமையை அவர் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட போது சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

சூர்யா கே.வி.ஆனந்த் படத்தின் பணிகளை முழுவதுமாக நிறைவு செய்துள்ளதால் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி தொடக்கத்தில் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.