எந்த தீர்ப்பு வந்தாலும் ஏற்க தயார்

நாடாளுமன்ற கலைப்பு தொடர்பில் விடுக்கப்பட்ட வர்த்தமானியின் மீதான
அடிப்படை உரிமைகள் மனுக்களைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஐக்கிய தேசிய கட்சி ஏற்றுக் கொள்ளும் என அக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற கட்டட தொகுதியில் ஊடகங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் தமது கட்சி நீதிமன்றின் தீர்ப்புகளை மதிக்கின்றது. அது சாதகமாகவோ அல்லது பாதகமாக அமைந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வோம் என கூறினார்.
அத்தோடு நீதிமன்ற தீர்ப்பு குறித்து எனக்கு எதிர்வு கூற முடியாது. அத்தோடு தீர்ப்பு குறித்து எமக்கு அச்சமில்லை. எவ்வகையான தீர்ப்பானாலும் அதனை ஏற்றுக்கொண்டு நாம் தொடர்ந்தும் மக்களுக்கு பணியாற்றுவோம் என கூறினார்.

No comments

Powered by Blogger.