ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார் அமீர்கான்

ஹந்தி சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் நடிப்பில் வெளியான ‘தக்ஸ் ஒஃப் ஹிந்தோஸ்தான்’ திரைப்படம் மிகப்பெரும் தோல்வியையடைந்தது.


அமிதாப் பச்சனும், அமீர்கானும் முதன் முறையாக இணைந்து நடித்திருந்த இப்படத்தை விஜய் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இது ரூ.300 கோடி செலவில் ஆதித்யா சோப்ரா நிறுவனம் தயாரித்தது.

தீபாவளியை முன்னிட்டு வெளியான ‘தக்ஸ் ஒஃப் ஹிந்தோஸ்தான்’ ரசிகர்களை கவரவில்லை. காட்சி அமைப்பு சிறப்பாக இருந்தும் கதையில் கோட்டை விட்டதால் வந்த வேகத்தில் திரும்பியது. இதனால் அமீர்கான் மிகவும் வருத்தத்தில் உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தப் படத்திற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் கடுமையாக உழைத்தோம். ஆனால் எந்த இடத்தில் நாங்கள் தவறு செய்தோம் என்று எங்களுக்குத் தெரியவில்லை. பெரும்பாலான ரசிகர்களால் இப்படம் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விட்டது என்பதை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்.

ஒரு படத்திற்கு வரும் மக்கள், அந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் தான் வருகிறார்கள். அப்படி வந்தவர்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியவில்லை.

இந்த முறை நான் என்னை நம்பி வந்த மக்களை மகிழ்ச்சிப்படுத்த தவறிவிட்டேன். அதற்காக என் ரசிகர்களிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

#Tamilarul.net #Tamil #Tamilnews #News  # Aamir Khan

No comments

Powered by Blogger.