ஜேர்மனிய ஜனாதிபதியுடன் மோடி சந்திப்பு!

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள அர்ஜென்டினா சென்றுள்ள பிரதமர் மோடி ஜேர்மனி ஜனாதிபதி அஞ்சலா மேர்கலை இன்று (சனிக்கிழமை) சந்தித்து பேசினார்.


அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது.

இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புடின், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியை அர்ஜென்டினாவின் ஜனாதிபதி மௌரிசியோ மக்ரி இன்று காலை வரவேற்றார்.

அதன்பின் அவருடன் நடந்த ஆலோசனையில் விவசாயம் மற்றும் உணவு பதப்படுத்துதல், விண்வெளி, ராணுவம், எண்ணெய் மற்றும் வாயு மற்றும் அணு சக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

அதன்பின்னர் பிரதமர் மோடி பியூனோஸ் அயர்ஸ் நகரில் உள்ள சென்டிரோ கோஸ்டா சாய்குவேரோ என்ற பகுதியில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் டொனால்ட் டஸ்க், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜீன் கிளாட் ஜங்கர் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்புக்குப் பின்னர் ஜெர்மன் அதிபர் அஞ்சலா மேர்கெலையும் பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரம்போஷாவையும் இன்று மாலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

#Angela-Merkal- #Modi #Tamilarul.net #Tamil #Tamilnews #Germany #India

No comments

Powered by Blogger.