ஜீவாவுக்கு ஜோடியாகிறார் மஞ்சிமா

குறும்பட இயக்குநர் ராஜேஷின் புதிய படத்துக்கு கதாநாயகி தெரிவு நடைபெற்று வந்த நிலையில் அப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சிமா மோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இப்படத்தில் நடிகர் ஜீவா மற்றும் அருள்நிதி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதில் ஜீவாவுக்கு ஜோடியாகவே மஞ்சிமா மோகன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தேவராட்டம்’ படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் தற்போது மஞ்சிமா மோகன் நடித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.