ஜனாதிபதி தலைமையில் விசேட நத்தார் விழா

ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நத்தார் விழா நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.


கோட்டை ஜனாதிபதி மாளிகையில் பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினதும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது நத்தார் கரோல் பாடல்களுடன் இன்னும் பல நிகழ்வுகள் விழாவை அலங்கரித்தன.

இங்கு விசேட உரை நிகழ்த்திய கொழும்பு பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உண்மையான நத்தார் என்பது உண்டு களித்து மகிழ்வது மட்டுமல்லாது, வறிய மக்களின் துயரங்களை புரிந்துகொண்டு அவர்களது பசியை போக்குவதற்காக ஒன்றுபடுவதாகுமெனக் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு சிறந்ததோர் வாழ்க்கை நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு அனைத்து ஆட்சியாளர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை பேராயர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த நத்தார் விழாவில் இலங்கைக்கான திருத்தந்தையின் பிரதிநிதி  பியரே நுயன் வென் டொட் ஆயர்  உள்ளிட்ட அருட் தந்தைகள் மற்றும் அருட் சகோதரிகள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் ஜோன் அமரதுங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன்,நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ, உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கலைஞர்கள் உள்ளிட்ட, பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.