கென்யா, சோமாலியாவாக மாறும் இலங்கை


கென்யா, சோமாலியா போன்ற நாடுகளின் நிலைமைக்கு இலங்கையும் செல்லும் ஆபத்து இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான கல்விப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


ஜனநாயக ஒன்றியம் கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நிலவும் இந்த பிரச்சினைக்கு குறுகிய காலத்தில் வழங்கப்பட வேண்டிய சிறந்த தீர்வு பொதுத் தேர்தலை நடத்துவதாகும். அப்படியில்லை என்றால், தகுந்த யோசனையை முன்வைக்குமாறு தேர்தலை நிராகரிக்கும் தரப்பிடம் கோருகிறோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வியாகுல நிலைமையை படிப்படியாக தீர்ப்பதற்கு முனைவதற்கு பதிலாக பிரச்சினை மிகவும் ஆழமாக சென்றுக்கொண்டிருக்கின்றது.

இந்த வியாகுல நிலைமை மேலும் அதிகரித்தால், அதன் பிரதிபலனாக இலங்கை, கென்யா, ஜிம்பாப்பே, சோமாலியா போன்ற நாடுகளின் நிலைமைக்கு செல்லும் ஆபத்து இருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம், நீதிமன்றம் என இந்த மூன்றும் நெருக்கடியை தீர்க்க முயற்சிப்பதாக தெரியவில்லை.

நெருக்கடியை நீடிக்கவும் ஆழமாக்கவும் இவற்றின் தீர்மானங்கள் வழிவகுக்குமாயின் பிரச்சினையை தீர்க்க வேறு வழியை கையாளுமாறு நாங்கள் இந்த மூன்று நிறுவனங்களிடம் கோருகிறோம் எனவும் தம்ம திஸாநாயக்க குறிப்பிடடுள்ளார்.
#Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo  #Court #Dhamma-Dissanayake
Powered by Blogger.