இரணைமடு குளத்தின் தற்போதைய நீா்மட்டம் 35 அடி.

வடக்கு மாகாணத்தின் மிகப் பெரும் குளம் தற்போது 35 அடியை தொட்டுள்ளதோடு மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள 10 பெரிய குளங்களும் நிரம்பியமை மகிழ்ச்சியை தருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பொறியியலாளர் சுதாகரன் தெரிவித்தார்.


இது தொடர்பில் பொறியியலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள குளங்களில் பெரிய குளங்கள் 10 எமது திணைக்களத்தின் ஆளுகையில் உள்ள குறித்த 10 குளங்களிலும் தற்போது போதிய நீர் தேக்கப்பட்டுள்ளது. இதில் 34 அடி கொள் அளவாக இருந்த இரணைமடுக் குளத்தில் அணைக்கட்டின் பாதுகாப்புக் கருதி 33 அடி நீரே தேக்கும் நிலமையில் குளப் பனரமைப்பு இடம்பெற்று

36 அடி நீர் தேக்கும் வாய்ப்பு கிட்டியது. அதன் பிரகாரம் தற்போது 35 நீர் உள்ளது. அதாவது புதிதாக புனரமைப்புச் செய்த பகுதியிலும் தண்ணீர் தற்போது தேக்கப்பட்டுள்ளது. இதேநேரம் சில முரண்பாடான தகவல்கள் கூறப்பட்டாலும் இந்த மாவட்டத்தின் விவசாயிகளின் நன்மை கருதி இந்த ஆண்டு 36 அடி நீர் தேக்கப்பட்டே தீரும்.

அதற்கு முன்பு நீர் திறக்கப்பட மாட்டாது. குளத்தின் அபிவிருத்தியை விரும்பாத சிலர் அல்லது இதனால் ஏற்படும் நன்மை அஞ்சுபவர்களின் கூற்றிற்காக மாவட்டத்திற்கு கிடைத்த அரும்பெரும் சொத்தை விரயம் செய்ய முடியாது. அதேநேரம் 36 அடியையும் மிஞ்சும் எனக் கண்டால் மட்டுமே நீர் வெளியேற்றப்படும்.

ஆண்டின் இறுதிப் பகுதி தற்போதுதான் ஆரம்பிப்பதனால் மழை வீழ்ச்சி தொடர்வதற்கான வாய்ப்பும் உள்ளது. அவ்வாறு மழை வீழ்ச்சி தொடர்ந்தால் இரணைமடுக் குளம் திறக்க வேண்டிய நிலமை ஏற்படலாம்.

இதேநேரம் மாவட்டத்தின் ஏனைய குளங்களான அக்கராயன் குளம் , கல்மடுக்குளம் , கரியாலைநாகபடுவான் குளம் , முறிப்பு குளம் , பிரமந்தனாறுக் குளம் , குடமுறிட்டிக் குளம் , வன்னேரிக் குளம் ஆகியவற்றோடு கனகாம்பிகைக் குளம் , ஆகியனவும் முழுக் போல் அளவை தொட்டு நிக்கின்றன.

அதனால் இந்த ஆண்டு சிறுபோக நெற் செய்கையில் விவசாயிகள் முழுமையாக ஈடுபட முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. என்றார். #Tamilarul.net #Tamil #Tamilnews #News  #Srilanka #Jaffna #colombo  #Iranamadu-Tank

No comments

Powered by Blogger.