யானைகளின் நடமாட்டம் குறித்து குறுந்தகவல் சேவை

ரயில் மார்க்கங்களில் யானைகள் விபத்துக்குள்ளாகி உயிரிழப்பதை தடுப்பதற்காக, யானைகளின் நடமாட்டம் குறித்து அறிவிக்கும் குறுந்தகவல் சேவையை அமுல்படுத்துவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, இந்தத் திட்டம் நாளை மறுதினம் முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

யானைகளின் நடமாட்டம் குறித்து ரயில் சாரதிக்கு உடன் அறிவிக்கும் வகையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் மோதி யானைகள் இறப்பதை தடுப்பது குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே, இந்த குறுந்தகவல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன், இந்த குறுந்தகவல் சேவையை 24 மணித்தியாலமும் முன்னெடுக்கும் நோக்கில், அதற்கான நிலையமொன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

குறுந்தகவல் நிலையத்தை அமைப்பதற்காக எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியை பெற்றுக் கொள்ளவுள்ளதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.