கேரள கஞ்சா கடத்திவர் கைது!

சுமார் இரண்டு கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்ற ஒருவரை வவுனியாவில் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.


வவுனியா, ஓமந்தை பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டதாக ஓமந்தை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கல்பிட்டி நோக்கி முச்சக்கர வண்டியில் கேரள கஞ்சாவை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்றுள்ளமை காவல்துறையினர் பூர்வாங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முச்சக்கர வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராமும், 770 கிராமும் நிறையுடைய கேரள கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியதுடன், முச்சக்கர வண்டியையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

சந்தேகநபரரை வவுனியா நீதவானிடம் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

Powered by Blogger.