வடக்கின் 10வது சர்வதேச வர்த்தகக் கண்காட்சி

வடக்கின் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி எதிர்வரும் ஜனவரி 25 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


ஆண்டுதோறும் 60,000 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்க்கும் இந்த கண்காட்சியில் இம்முறை 2,500 இற்கும் மேற்பட்ட உற்பத்திகளுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

10 ஆவது தடவையாக இடம்பெறும் கண்காட்சியில் நிர்மாணம், விருந்தோம்பல், உணவு, பான வகை, பொதியிடல், மோட்டார் வாகனம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிதியியல் சேவைகள், ஆடையணி, விவசாயம், நுகர்வோர் பொருட்கள் என மேலும் பல காட்சிப்படுத்தப்படவுள்ளன.

ஜனவரி 27 ஆம் திகதி வரை குறித்த கண்காட்சி நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.