யாழில் இலவசமாக ஊடக பயிற்சி நெறி!

யாழ் மாவட் ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணிய
மாணவர்களுக்கான ஊடகப் பயிற்சிப் பட்டறை இன்று   [ 08..12.2018 ] யாழ் ப்பாணம்   கோண்டாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலையில் ஆரம்பமானது. 

இன்று காலை 7.30 மணி தொடக்கம் 5 மணி வரை நடைபெறும் பயிற்சியின் தொடராகநாளை மாலை 4.00மணிக்கு   [09.12.2018]  ''யாழ் சாரணர் '' நூல் வெளியீடும் பங்கு பற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இடம்பெறும்.யாழ் சாரணர் நூலினை ஏ டி சி ராஜீவன் மற்றும் ஏ டி சி சம்பந்தன் ஆகியோர் வெளியிட்டு வைக்க பிராந்திய ஊடகங்களின் ஆசிரியர்கள் பெற்றுக் கொள்வார்கள். பிரதம அதிதியாக   யாழ் மாவட் ட   சாரணர் சங்க செயற்குழுத் தலைவரும்  வடமாகாண ஆளுநரின் செயலாளருமான எஸ் .இளங்கோவன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

 . இரு நாட்களும் இடம்பெற்ற பயிற்சியில் வளவாளர்களாக வருகை விரிவுரையாளரும் ஊடகவியலாளருமான யாழ். தர்மினி பத்மநாதன் ,  சப்தமி காலைக்கூட இயக்குனர் கே. சத்தியன், எஸ் .தூசிகரன் மற்றும் , கே. சுஜீவன் ஆகியோர் வளவாளர்களாக பங்கு கொண்டு    ஊடகங்களின் பயன்பாடு  , ஒளி ஒலி அமைப்பு, புகைப்படக் கலை , கலை இலக்கிய படைப்பாக்கம் என்பன குறித்து பயிற்சிக்களை வழங்கவுள்ளமை  குறிப்பிடத்தக்கது. . 


[yaal.tharmini pathmanathan]

No comments

Powered by Blogger.